விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் பிக் பாஸ் நடிகர்.. வெறித்தனமாக காஸ்டிங் செய்யும் மகிழ் திருமேனி
விடாமுயற்சி
படப்பிடிப்பு துவங்கவில்லை, ஒரு அப்டேட் கூட வரவில்லை என்றாலும் கூட விடாமுயற்சி பற்றிய பேச்சு ஒவ்வொரு நாளும் காட்டு தீ போல் பரவி கொண்டு தான் இருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் துவங்கவுள்ளது. நடிகர் அஜித்தும் தற்போது துபாய்க்கு சென்றுள்ள நிலையில், இந்த மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த படப்பிடிப்பில் திரிஷாவும் இணையவுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் கூட சஞ்சய் தத் உடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளிவந்து ஏறக்குறைய அவர் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளது.
வில்லனாக பிக் பாஸ் நடிகர்
இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத் மட்டும் வில்லனாக நடிக்க வில்லை மேலும் ஒரு வில்லன் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ் தான் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
அர்ஜுன் தாஸ் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தான் தற்போது ஆரவ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் ஆரவ் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.