பிக் பாஸ் அமீருக்கு உதவிய அந்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா! இணையத்தில் வைரலான புகைப்படம்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி இறுதி போட்டியை நெருங்கி வருகிறது.
மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் Freeze டாஸ்க் நடந்து வருகிறது, இதில் போட்டியாளர்களின் குடும்பம் சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ராஜு, நிரூப், அக்ஷரா, சிபி உள்ளிட்டோரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர்.
இதனிடையே நேற்று கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் அமீர் தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அது அங்கிருந்த போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் கலங்க வைத்தது.
மேலும் அமீர் தனக்கு உதவி செய்து வரும் குடும்பம் குறித்து பேசியிருந்தார். அவர்கள் அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அமீருக்கு உதவும் அந்த குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அவர்களின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..