வீடு கட்டியதை தொடர்ந்து முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ள அனிதா சம்பத்- எங்கே சென்றுள்ளார் தெரியுமா?
அனிதா சம்பத்
சென்னையில் பிறந்து வளர்ந்துள்ள இவர் பிரபல எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகள் ஆவார். சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இதனால் படங்களில் செய்தி வாசிப்பாளராக கூட நடித்திருக்கிறார். 2019ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய பிரபாகர் என்பவரை காதலித்து 2019ம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்.
பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனிதா மக்களின் ஆதரவை சம்பாதித்தார்.
புதிய பயணம்
பிக்பாஸ் பிறகு தனது அப்பாவை இழந்த அனிதா சம்பத் அந்த சோகத்தில் இருந்து வெளியே வர கொஞ்ச நாட்கள் எடுத்துக் கொண்டார். அண்மையில் புதிய வீடு வாங்கியிருப்பதாக கூறி வீட்டை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
தற்போது அனிதா மற்றும் அவரது கணவர் இருவரும் முதன்முறையாக வெளிநாட்டு பயணம் சென்றுள்ளனர். மலேசியாவில் அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படத்தை அனிதா தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
சம்பள பிரச்சனையால் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றப்படுகிறாரா?- ரசிகர்கள் வருத்தம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
