பிக் பாஸ் அர்ச்சனா - அருண் திருமணம்.. எதிர்பார்க்காத ஒரு அப்டேட் கொடுத்த ஜோடி
கடந்த பிக் பாஸ் 7ம் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் அர்ச்சனா. அவர் பிக் பாஸ் செல்லும் முன் சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தார். ஆனால் பிக் பாஸ் சென்று வந்த பிறகு அவர் படங்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார்.
மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத்தை தான் அர்ச்சனா காதலித்து வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் 8ல் அருண் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்த நிலையில் அவர்கள் காதலை உலகத்திற்கே அறிவித்துவிட்டனர்.

திருமணம்
இந்நிலையில் அருண் அளித்த லேட்டஸ்ட் பேட்டியில் தங்கள் திருமணத்தை விரைவில் நடத்த வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த வருடத்திற்குள் திருமணம் செய்ய திட்டமிட்டு வருகிறோம் என தெரிவித்து இருக்கிறார்.
அதனால் விரைவில் அருண் - அர்ச்சனா ஜோடி திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
You May Like This Video
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu