இந்த புகைப்படத்தில் இருக்கும் சென்சேஷன் நட்சத்திரம் யார் தெரியுமா.. அட இவரா
வைரல் புகைப்படம்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது சென்சேஷன் நட்சத்திரமாக வலம் வரும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த இவர் தற்போது டாப் 3ல் இருக்கிறார் என ரசிகர்களால் கூறப்படுகிறது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை அர்ச்சனா தான். ஆம், அர்ச்சனாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமான அர்ச்சனா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.