காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா! முன்னணி சீரியல் ஹீரோ தான்
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்தவர் அர்ச்சனா. ஆனால் அதற்கடுத்து அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆகி, டைட்டில் ஜெயித்தார்.
அவர் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் பிரசாத் உடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒன்றாக ட்ரிப் செல்வதாகவும் புகைப்படங்கள் கசிந்தது.
உறுதியான காதல்?
இந்நிலையில் அருண் மற்றும் அர்ச்சனா காதல் உறுதியாகி இருக்கிறது. தற்போது அருண் ஒரு போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த போட்டோஷூட் நடக்கும்போது அர்ச்சனாவும் உடன் தான் இருந்திருக்கிறார்.
அது மட்டுமின்றி போட்டோஷூட் வீடியோ கமெண்டில் அர்ச்சனா "Thanks for shooting my hero" என போட்டோகிராபருக்கு நன்றி கூறி இருக்கிறார்.
அதனால் அவர்கள் காதல் உறுதியாகி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.
You May Like This Video


15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
