சிக்கலில் மாட்டிய சீரியல் நடிகை அர்ச்சனா.. வனத்துறை தீவிர விசாரணை
சின்னத்திரை நடிகை அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் தொகுப்பாளராக பிரபலம் ஆகி அதன் பின் சீரியலில் நடிக்க தொடங்கியவர் தான்.
சீரியலில் பிரபலம் ஆனதை விட அவர் பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனது தான் அதிகம். அவர் பிக் பாஸ் 7ம் சீசனில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்து அவர் டைட்டில் ஜெயித்தார்.

சர்ச்சை
திருவண்ணாமலை மலை மீது ஏற வனத்துறை தடை விதித்து இருக்கிறது. அதனால் தான் மகா தீபத்தின் போதும் மக்கள் மலை மீது ஏற அனுமதிப்பதில்லை.
இந்நிலையில் நடிகை அர்ச்சனா திருவண்ணாமலை மலை மீது ஏறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது சர்ச்சை ஆகி இருக்கும் நிலையில் வனத்துறையினர் அர்ச்சனாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
