பிக் பாஸ் ஆயிஷாவுக்கு என்னாச்சு! திடீர் மூச்சு பிரச்சனையால் அனைவரும் ஷாக்
ஆயிஷா
ஜீ தமிழில் சத்யா சீரியல் மூலமாக பிரபலாமான நடிகை ஆயிஷா தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார்.
நேற்று அவர் அசல் கோலார் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் கண்ணீர் விட்டு இருந்தார். அதன் பின் இன்று ஜனனி அவருடன் சண்டை வரும் என சொன்னதால் அவர் இன்னும் கலக்கத்தில் இருந்தார்.
மூச்சு திணறல்
இந்நிலையில் இன்று ஆயிஷாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு இருக்கிறது. அதிர்ச்சியான மற்ற போட்டியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்து இருக்கிறார்கள். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து மூச்சு திணறல் இருந்ததால் பிக் பாஸ் அழைத்து மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளித்து இருக்கிறது.
அதற்கு பிறகு அவர் தேறி இருப்பதாக தெரிகிறது.
வாடகைத்தாயாக இருந்தது இவரா? நயன்தாரா இரட்டை குழந்தைகள் பற்றி வெளியான தகவல்