நீங்கள் எல்லாம் ஒரு தலைவரா, இல்லையா மனுஷனா முதலில்- விஜய் குறித்து பிக்பாஸ் அசீம் காட்டம்
விஜய் TVK
நடிகர் விஜய் சினிமாவை விடுத்து இப்போது மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் களமிறங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் தனது ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு முழுநேரம் அரசியலில் களமிறங்கியுள்ளார்.
கட்சியை தொடங்கி 2 மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்துவிட்டார், இப்போது Road Show நடத்தி வருகிறார். சமீபத்தில் கருரில் அவர் Road Show நடத்தியபோது பிரச்சனை ஏற்பட அதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் இறந்தது குறித்து தான் சமூக வலைதளங்களில் நிறைய பேசப்படுகிறது.
பிக்பாஸ் அசீம்
இந்த பிரச்சனை குறித்து பிக்பாஸ் புகழ் அசீம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், உங்கள பாக்க வந்த கூட்டம் உங்க கண்ணு முன்னாடி மூச்சி முட்டி நின்னத பாத்தும் ஒன்னும் பண்ணல.
ஏர்போர்ட்டில் நிரூபர் கேள்வி கேக்குறாங்க, அது காதுல வாங்காம புறமுதுகு காட்டிட்டு ஓடுறீங்க. நீங்கெல்லாம் என்ன தலைவர், அட தலைவர விடுங்க, என்ன மனுஷன், நாலு நாள் கழிச்சி வீடியோ போடுறீங்க.
இதையே எதிர்க்கொள்ளாத நீங்க CM ஆகலாம்னு பகல் கனவு கண்டுக்கிட்டு இருக்கீங்களே, அப்படியே நீங்க CM ஆனாலும் இந்த மக்களுக்கு என்ன பண்ணுவீங்க, ஒன்னும் பண்ண மாட்டீங்க என பேசியுள்ளார்.