போதைப் பொருள் வைத்திருக்கிறாரா பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்... போலீசார் அதிரடி
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு 100 நாட்கள் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சம் இல்லாமம் ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 10. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.

பிக்பாஸ் 10
கடந்த செப்டம்பர் மாதம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக துவங்கியது. பிளாக் பாண்டி, சாவின்யா, ஜாவத் ஷெரீப், மணிவண்ணன், ஆனந்தி, சாந்தினி, அக்ஷிதா, அஸ்மிதா ஆகியோர் எலிமினேட் ஆகி இருந்தனர்.
எலிமினேஷன் ஆனவர்களில் சிலர் மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து மறுபடியும் எலிமினேட் ஆனவர்களும் உள்ளனர். நாளுக்கு நாள் மிகவும் வித்தியாசமான பரபரப்பான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் விளையாட்டின் சீரியஸை புரிந்துகொண்டு விளையாடுகிறார்கள்.
போதைப்பொருள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமாக பல கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். அப்படி கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் பாலாஜி முருகதாஸ்.

இப்போது ஒரு தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். இந்த நேரத்தில் பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
அவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 15 போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். தேவையென்றால் தனக்கு ரத்தப் பரிசோதனை செய்யலாம் என சமூக வலைதள வீடியோவில் பாலாஜி முருகதாஸ் பதிவு போட்டுள்ளார்.