பெண் கேட்ட கேள்வி.. கடும் அதிர்ச்சி ஆன ஆரி, ராஜு! பிக் பாஸ் காமன் மேன் சம்பவம்
பிக் பாஸ் ஷோவில் பொதுமக்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்ளலாம் என அறிவித்து, அதற்காக பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறது விஜய் டிவி.
அதில் போட்டியாளர்களாக வர விரும்புபவர்களை தேர்வு செய்யும் ஜட்ஜுகளாக முந்தைய சீசன் வெற்றியாளர்கள் ஆன ராஜு, ஆரி, ஓவியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

அதிர்ந்த நடுவர்கள்
பிக் பாஸ் காமன் மேன் இன்றைய எபிசோடு ப்ரொமோவில் பெண் ஒருவர் கேட்ட கேள்வி நடுவர்கள் எல்லோரையும் கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
கரிஷ்மா என்ற பெண் வந்தபோது அவரைப் பார்த்து ஆரி ஒரு கேள்வி கேட்டார், "கார், வீடு என சொகுசாக priveleged ஆக இருக்கிறீர்கள். உங்களை ஏன் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப வேண்டும்" என ஆரி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அந்த பெண், "உங்களுக்கும் எல்லாமே இருக்கு தானே. நீங்கள் எதற்கு வந்து ஜட்ஜ் செய்கிறீர்கள்" என எதிர் கேள்வி கேட்டார். அது நடுவர்களை கடும் அதிர்ச்சி ஆக்கிவிட்டது. ப்ரோமோவை நீங்களே பாருங்க.
உங்கள எதுக்காக Bigg Boss வீட்டுக்குள்ள அனுப்பனும்?? 😒
— Vijay Television (@vijaytelevision) August 19, 2026
Bigg Boss - The Common Man திங்கள்- வெள்ளி இரவு 10.00 மணிக்கு.. சனி - ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTheCommonMan #BBTheCommonMan #VijaySethupathi #CommonMan #BiggBoss #BiggBossTamil #VijayTV… pic.twitter.com/pbzxEADvYP
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan