பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டுக்குள் நுழைகிறார்களா ! எப்போது தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5.
விரைவில் முடியவுள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது ராஜு, நிரூப், பாவனி, பிரியங்கா, அமீர் என 5 போட்டியாளர்கள் மட்டும் பைனல்ஸ்-க்கு சென்றுள்ளனர்.
மேலும் தற்போது இவர்களில் யார் பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வெல்ல போகிறார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கின்றனர்.
மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சந்தித்து கொள்வதால் கலகலப்பான அந்த எபிசோட்டை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.