பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் செளந்தர்யா என்ன செய்கிறார் பாருங்க
செளந்தர்யா
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. கடந்த 100 நாட்களாக மக்கள் பரபரப்பாக பேசி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 8.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த சீசனில் நிறைய சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள், அதுவே இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க ஒரு காரணமாக இருந்தது.
முத்துக்குமரன் முதல் இடத்தை பிடிக்க 2வது இடத்தை சௌந்தர்யா பிடித்துக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் சில இணையத் தொடர்களில் நடித்த சௌந்தர்யா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என தொடர்ந்து பிஸியாக வலம் வருகிறார்.
என்ன செய்கிறார் பாருங்க
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் கம்பெனி நிகழ்ச்சியில் செளந்தர்யா பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்த் மற்றும் சக பிரபலங்களுடன் செளந்தர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.