பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள ஜாக்குலின் மொத்தமாக வாங்கியுள்ள சம்பளம்... இவ்வளவா?
பிக் பாஸ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன், விஷால், ரயான், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஆகிய 6 போட்டியாளர்கள் பினாலே வாரத்தில் உள்ளனர்.
இந்த வாரம் பணப்பெட்டி அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் அதில் ஒரு பெரிய ட்விஸ்ட் வைக்கப்பட்டது. வழக்கமாக வீட்டுக்கு பெட்டி அனுப்பப்படும். அதை போட்டியாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்பது போல தான் முந்தைய சீசன்களில் இருந்தது.
ஆனால் இந்த முறை அது மாற்றப்பட்டு போட்டியாளர்கள் கதவை தாண்டி ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வரவேண்டும். அப்படி அவர்கள் வரவில்லை என்றால் எலிமினேட் ஆவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இவ்வளவா?
அந்த வகையில், 8 லட்சத்துக்கான பணப்பெட்டியை எடுக்க முடியாமல் ஜாக்குலின் எலிமினேட் ஆனார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜாக்குலின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் பெரும் ஜாக்குலின். 101 நாட்களுக்கு மொத்தமாக ரூ.25 லட்சத்து 25 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.
You May Like This Video

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
