டாஸ்கில் திட்டமிட்டு பவித்ராவை தோற்கடித்தாரா பிக் பாஸ்?.. வைரலாகும் வீடியோ
பிக் பாஸ்
பிக் பாஸ் 8 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 23 போட்டியாளர்களில் இருந்து 10 பேர் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கிற்கு வந்துள்ளனர்.
அந்த வகையில், இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கில் வெற்றிபெறும் போட்டியாளர்கள் நேரடியாக பைனலுக்கு செல்ல முடியும் என்ற காரணத்தினால் போட்டியாளர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது, இதற்கான டாஸ்குகள் நடைபெற்று வரும் நிலையில், மேஜை மீது நின்று தங்கள் தலைக்கு மேல் இருக்கும் பல்பை கையால் எட்டிப் பிடித்தவாரு நிற்க வேண்டும் என்ற டாஸ்க் நடைபெற்றது.
வைரலாகும் வீடியோ
இதில், போட்டியாளர்கள் எட்டிப்பிடித்தபடி நின்றால் மட்டுமே லைட் எறியும். இல்லை என்றால் லைட் நின்று விடும். ஆனால், வலிமையான போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா கையை எடுக்காமல் இருந்த போதும் லைட் ஆஃப் ஆனது.
இதை கண்டு ரசிகர்கள் விஷாலை வெற்றி பெற வைக்கவே பிக் பாஸ் இதுபோன்ற செயலை செய்ததாக விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,
#Pavithra has not even taken the hand but lights off and on....@vijaytelevision switch on and off panigala 🤡🤡🤡 #BiggBossTamil8 pic.twitter.com/Ayh6i3DVVp
— Raanav King of Content (@I_i_ilavarisirk) December 31, 2024