பிக் பாஸ் சீசன் 5 ராஜு இந்த முன்னணி நடிகரின் வெறித்தனமான ரசிகராம்.. அட, இது தெரியாம போச்சே
பிக் பாஸ் சீசன் 5 கடந்த மாதம் துவங்கப்பட்ட நிலையில் இன்று வரை 34 நாட்கள் ஆகிறது.
இதில் இதுவரை 5 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். நமிதா மாரிமுத்து தானாகவே வீட்டிலிருந்து வெளியேறினார்.
மேலும், நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு மற்றும் ஸ்ருதி ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்று வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து இன்று வரை அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பவர் ராஜு.
இவர் பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துள்ளார். மேலும் நட்புனா என்னண்னு தெரியுமா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ராஜு, அளித்துள்ள ஒரு பேட்டியில், தான் தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகர் என்றும், சுறா படத்தை தியேட்டரில் ரூ. 1400 கொடுத்து பார்த்ததாகவும் கூறியுள்ளார்.