பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளருக்கு லட்சக்கணக்கில் அபராதம்.. வெளிவராத உண்மை
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் தற்போது ராஜு, பிரியங்கா, பாவ்னி, தாமரை, சிபி, நிரூப் மற்றும் அமீர் என 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த 7 போட்டியாளர்களின் அமீர் ஏற்கனவே டிக்கெட் டு பினாலே போட்டியை வென்று, இறுதி போட்டிக்கு முதல் ஆளாக தேர்வாகிவிட்டார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து, இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், பிக் பாஸ் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், எனக்கு இந்த வீட்டிற்கு இருக்க விருப்பம் இல்லை, நான் உடனடியாக வெளியே செல்லவேண்டும் என்று அடம்பிடித்த வெளியேறினால், ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிப்பார்களாம்.
அப்படி, வீட்டை விட்டு வெளியேறி போட்டியாளர்கள், இந்த அபராத தொகையை செலுத்தவில்லை என்றால், அதற்கான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.