பிக் பாஸ் வீட்டிற்குள் மது குடிப்பார்களா..! வெளிவந்த ஷாக்கிங் உண்மை செய்தி
பிக் பாஸ் சீசன் 5 தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 நபர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால், இதிலிருந்து இந்த வாரத்தின் இறுதியில் ஒரு போட்டியாளர்கள் வெளியேறி, மீதமுள்ள டாப் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி வாரத்திற்கு செல்வார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் விருப்பப்படும் போட்டியாளர்கள் சிகரெட் பிடிமுடியும்.
அதற்கான இடத்தையும் ஒதுக்கி கொடுத்துள்ளதை மட்டுமே தான் பலரும் அறிவார்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் மதுவும் குடிப்பார்களாம். வாரத்தின் இறுதியில் வீட்டிற்குள், விருப்பப்படும் போட்டியாளர்களுக்கு பிடித்த மதுபானங்கள் அனுப்பிவைப்பார்களாம்.
ஆனால், இந்த காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு ஆகாது, எடிட் செய்துவிடுவார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.