என்னுடைய விவாகரத்து என் தாய்க்கு மிகப்பெரிய வலியை கொடுத்தது.. கண்கலங்கிய அபிஷேக்.. பிக் பாஸ் 5 Day 2
பிரமாண்டமாக துவங்கிய பிக் பாஸ் சீசன் 5வின் இரண்டாம் நாள் இன்று. இதில் முதல் வாரத்தின் Luxury Budget டாஸ்க் நடைபெற்றது.
இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் கடந்த வந்த பாதையில் இருக்கும், இன்ப துன்பங்களை பற்றி கூற வேண்டும்.
இதில் முதல் ஆளாக பின்னணி கானா பாடகி இசைவாணி தனது வாழ்க்கையில் நடந்து துன்பங்களை பற்றி கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தார்.
அதே போல், டாஸ்கில் இல்லாமல் மற்ற போட்டியாளர்களுடன் தனியாக அமர்ந்து பேசிய அபிஷேக், தனது அம்மாவுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட சில விஷயங்களை கூறி கண்கலங்கி அழுதார்.
அதுமட்மின்றி தனது தாயிடம் அதிகமாக சண்டை போட்டதாகவும், தனது திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்ததும் தனது தாய்க்கு மிகப்பெரிய மன வேதனையாக இருந்தது என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து இரண்டாவது நபராக கடந்து வந்த பாதை டாஸ்கில் தனது சிறு வயது முதல் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களையும், தான் எப்படி பாடகியாக வளர்ந்தேன் என்பது குறித்தும் பேசினார் பாடகி சின்னப்பொண்ணு.