சூடு பிடிக்கும் பிக் பாஸ் வீடு.. ஆண் போட்ட விதிமுறை! பெண்கள் தர மறுத்த முக்கிய விஷயத்தால் பரபரப்பு
பிக் பாஸ் இரண்டாவது நாள்
பிக் பாஸ் 8 வீட்டில் தற்போது பெண்கள் ஒரு அணியாகவும், ஆண்கள் ஒரு அணியாகவும் இருக்கிறார்கள். இரு அணிகளுக்கும் இரு வீடு உள்ளன. இதில் பெண்கள் அணியில் இருந்து பவித்ரா ஆண்கள் அணிக்கு சென்றுள்ளார். அதே போல் ஆண்கள் அணியில் இருந்த முத்துக்குமரன் பெண்கள் அணிக்கு சென்றுள்ளார்.
ஆண்கள் வீட்டிற்குள் பெண்கள் வருவதற்கும், பெண்கள் வீட்டிற்குள் ஆண்கள் வருவதற்கும் அந்தந்த அணியினர்கள் சில விதிமுறைகளை விதித்திருந்தார். இதுகுறித்து இரண்டாவது நாளான இன்று 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
3வது ப்ரோமோ வீடியோ
இதில், பெண்கள் ஸ்டோர் ரூம் வரவேண்டும் என்றால் ஆண்கள் அனுமதி இல்லாமல் வரக்கூடாது என விதிமுறையை முத்துக்குமாரன் படிக்கிறார். இதன்பின் பெண்கள் அணியில் இருந்து ஆண்களின் வீட்டிற்கு வருவதற்கு அனுமதிக்க கேட்க வேண்டும், அந்த சமயத்தில் பெண்கள் அணியில் இருக்கும் உப்பை கொடுத்தால் மட்டுமே, வீட்டிற்குள் வர அனுமதி என சொல்லலாம் என்கிறார் பவித்ரா.
அதே போல் பெண்கள் அணி தங்களிடம் இருக்கும் உப்பை கொடுத்தால் ஆண்கள் அணியில் இருக்கும் மளிகை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பெண்கள் அணி உப்பை தர மறுக்கிறார்கள். உப்பு தர முடியாது என்றும், எங்களுக்கு உணவு எதுவும் வேண்டாம் என்றும் கூறிவிடுகிறார்கள்.
இதன்பின் அனைத்து மளிகை பொருட்களை ஆண்கள் அணி தங்களுடைய இடத்தை லாக் செய்துவிடுகிறார்கள். இதனால் பிக் பாஸ் 8 வீட்டிற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல் வாரம், அதுவும் இரண்டாவது நாளிலேயே பிக் பாஸ் போட்டியாளர்களுக்குள் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. இது எங்கு போய் முடிய போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.