என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்.. கண்கலங்கி கதறி அழுத நமீதா மாரிமுத்து.. Bigg Boss Day 4
விறுவிறுப்பாக துவங்கிய பிக் பாஸ் சீசன் 5ன் நான்காம் நாள் இன்று. இந்த வாரம் Luxary Budget டாஸ்க்கில், ஒவ்வொரு போட்டியாளரும், தான் கடந்து வந்த பாதையை கூறி வருகிறார்கள்.
அந்த வரிசையில், தற்போது நமீதா மாரிமுத்து தனது வாழ்க்கையில் நடத்த கசப்பான அனுபவங்களை கூறினார்.
தான், திருநங்கையாக மாறும் பொழுது இந்த சமூகமும், தன் குடும்பம் பல கஷ்டங்களை தனக்கு கொடுத்தது என்றும் தனது அப்பா, அம்மாவே தனக்கு உறுதுணையாக இல்லை என்றும் கூறினார்.
மேலும், தன்னை ஒரு பைத்தியம் என்று உறவினர்கள் சாயம் பூச பார்த்தார்கள், ஆனால் அதனை எல்லாம் நான் தகர்த்தெறிந்து வெளியே வந்தேன். என்னை கொலை கூட செய்துவிடுவார்களோ எண்ணி நான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று கூறினார்.
தொடர்ந்து, மிஸ் சென்னை, மிஸ் தமிழ் நாடு, உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்துகொண்டு என் குடும்பத்திற்கு பெருமை சேர்ந்தேன். என் போல் உள்ள பலருக்கும் ஒரு வாழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். என்ன போல் இருப்பவர்களை ஒதுக்கி விடாதீர்கள், அவர்களுக்கு படிப்பை கொடுங்கள் என்று கூறினார் நமீதா மாரிமுத்து.