இதுக்கு அப்படி இருந்துட்டு போயிரலாம்.. விக்ரமனை தாக்கி பதிவிட்ட பிக் பாஸ் தனலட்சுமி?
பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு 2ம் இடம் பிடித்தவர் விக்ரமன். அவர் ஒரு அரசியல் கட்சியில் இருக்கும் நிலையில், அந்த கட்சியின் ஆதரவும் விக்ரமனுக்கு இருந்தது. விக்ரமனை ஜெயிக்க வைக்க அந்த கட்சியின் தலைவரே ஆதரவு கோரி இருந்தார். இருப்பினும் பைனலில் அவருக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் கிருபா முனுசாமி என்ற பெண் விக்ரமன் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி இருந்தார். வாட்சப் உரையாடல்களையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
அந்த குற்றச்சாட்டுகளை மறுத்த விக்ரமன், தான் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் இப்படி புகார் கூறுகிறார் என பதிலடி கொடுத்திருந்தார்.

தாக்கி பேசிய தனலட்சுமி
இந்நிலையில் பிக் பாஸ் 6ல் முக்கிய போட்டியாளராக இருந்த தனலட்சுமி தற்போது விக்ரமனை மறைமுகமாக தாக்கி பதிவிட்டு இருக்கிறார்.
"கலப்படமான நல்லவனா இருக்கறத விட ..சுத்தமான கெட்டவனா இருந்துட்டு போயிரலாம்.... Just post" என தனலட்சுமி பதிவிட்டு இருக்கிறார்.
அவர் பெயர் குறிப்பிடாமல் பதிவிட்டாலும், அவர் விக்ரமனை தான் தாக்கி இருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்டில் பேசி வருகின்றனர்.
43 வயதில் இப்படியா? வாளமீனு நடிகை மாளவிகா நீச்சல் உடையில் எல்லைமீறிய கிளாமர்