பிக்பாஸ் 9 முடித்த கையோடு திவ்யா கணேசன் சென்ற ஊர், பிரம்மாண்ட வரவேற்பு... வீடியோவுடன் இதோ
பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 9.
20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அதிரடியாக நடந்து வந்தது, 4 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாகவும் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்கள் என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் 9வது சீசன் பரபரப்பின் உச்சமாக ஓடியது. ஆனால் இந்த சீசனில் என்ஜாய் செய்யும் அளவு சில விஷயங்கள் இருந்ததா தெரியவில்லை, ஆனால் சண்டை, சர்ச்சை, மோசமாக பேசுவது என தான் இருந்தது.

திவ்யா கணேஷ்
இந்த 9வது சீசனை வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த நடிகை திவ்யா கணேஷ் வென்றார். ஆரம்பத்தில் இருந்தே தனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை செய்து எல்லோருக்கும் டப் கொடுக்கும் போட்டியாளராக விளையாடி வந்தார்.

கானா வினோத் ரூ. 18 லட்சம் எடுத்து வீட்டைவிட்டு வெளியேறினார், அவர் தான் ஜெயிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கையில் பெட்டி எடுத்து அவர் கிளம்பியதால் பிக்பாஸ் 9வது சீசன் பட்டத்தை திவ்யா கணேஷ் வென்றார்.
தற்போது திவ்யா கணேஷ் பிக்பாஸ் 9வது சீசன் டைட்டிலை வென்ற கையோடு தனது சொந்த ஊரில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதோ அவரே ஷேர் செய்த வீடியோ,