பிக் பாஸ் திவாகருக்கு மூன்று திருமணம் நடந்திருக்கிறதா? அவரே விளக்கம்
விஜய் டிவி பிக் பாஸ் ஷோவின் 9ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் திவாகர். வாட்டர் மெலன் ஸ்டார் என்றும், நடிப்பு அரக்கன் எனவும் தன்னை தானே சொல்லிக்கொள்ளும் அவர் பிக் பாஸ் வீட்டில் செய்த அட்ராசிட்டிகாக அதிகம் ட்ரோல்களை சந்தித்தார்.
நடிப்பு அரக்கன் என அவர் சொல்லிக்கொண்டே இருந்ததும், விஜய் சேதுபதி போல நன்றாக நடிக்கிறேன் என அவர் சொன்னதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

திருமணம் உண்மையா?
திவாகர் தனக்கு திருமணம் ஆகவில்லை என பிக் பாஸ் ஷோவில் கூறிய நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படம் வெளியாகி சமீபத்தில் வைரலானது.
இது பற்றி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திவாகர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் அவருக்கு 3 திருமணம் நடந்திருப்பதாகவும் தகவல் பரவியது.
நான் மூன்று திருமணம் எல்லாம் செய்யவில்லை, தனியாக தான் வாழ்ந்து வருவதாக அவர் கூறி இருக்கிறார்.
