பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையவுள்ள முக்கிய போட்டியாளர், மறுபடியுமா?
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5, தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முக்கிய போட்டியாளரான மதுமிதா வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே முந்தைய பிக்பாஸ் நிகழ்ச்சிகளை ஒப்பிடுகையில் இந்த பிக்பாஸ் சீசன் 5-ல் சற்று விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது வாரத்திலே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டவர் அபிஷேக் ராஜா. இவரை மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதால் அபிஷேக் ராஜாவை கன்டென்டிற்காக மீண்டும் வீட்டிற்குள் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.