பிக்பாஸ் புகழ் அபிஷேக் ராஜாவிற்கு ஜாம் ஜாம் என திருமணம் முடிந்தது- பெண் யார், வீடியோவுடன் இதோ
அபிஷேக் ராஜா
பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பல விமர்சனங்களை எதிர்க்கொண்டவர் அபிஷேக் ராஜா.
21 நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் மீண்டும் வைல்ட் கார்ட்டு எணட்ரியாக வந்து 63வது நாளில் மீண்டும் வெளியேறினார்.
யூடியூப் சேனல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் சொந்தமாக ஓப்பன் பண்ணா எனும் பக்கத்தை தொடங்கி பட விமர்சனங்கள் கூறி வந்தவர் கமல், விஜய் சேதுபதி, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களை பேட்டி எடுத்திருந்தார்.
சினிமா விமர்சகர் என்பதை தாண்டி நடிகராகவும் வலம் வருகிறார்.
திருமணம்
தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அபிஷேக் பின் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள் என்பது அவர் பிக்பாஸ் கலந்துகொண்ட பிறகு தான் தெரியும்.
அபிஷேக் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தனது காதலி என ஒருவரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அபிஷேக்கிற்கு திருமணம் நடந்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்ளில் வலம் வருகிறது.
இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜாம் ஜாம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அபிஷேக் ராஜாவிற்கு இன்று ஜாம் ஜாம் என திருமணம் நடந்தது..!#jamjam #abishekraja #marriage #cineulagam pic.twitter.com/2aNBEoxyoU
— Cineulagam (@cineulagam) June 3, 2024