2வது வீட்டை வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்.. அவரே வெளியிட்ட அழகிய போட்டோஸ்
அனிதா சம்பத்
அனிதா சம்பத், இந்த பெயரை கேட்டதும் பிக்பாஸ் நிகழ்ச்சியும், அதில் இவர் விளையாடிய விளையாட்டும் தான் ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வரும்.
செய்தி வாசிப்பாளராக சன் தொலைக்காட்சியில் பணியாற்றி லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்ற இவர் அப்படியே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி பக்கம் வந்து இப்போது இதே தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
பின் நிறைய தனியார் விளம்பரங்கள் நடிப்பது, சொந்தமான யூடியூப் பக்கம் நடந்துவது என செம பிஸியாக உள்ளார்.
புதிய வீடு
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அனிதா சம்பத் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது, அதில் ஒன்று தான் புதிய வீடு. தனது முதல் சொந்த வீட்டை சில வருடங்களுக்கு முன் கட்டியவர் தற்போது 2வது வீட்டை வாங்கியுள்ளார்.
தனது அம்மாவிற்காக புதிய வீடு வாங்கியுள்ளாராம், வீட்டில் பூஜை போடப்பட்ட போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இந்த சந்தோஷ செய்தியை கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.