புதிய வீடு கட்டியுள்ள சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான அன்ஷிதா.. வீட்டின் போட்டோஸ் இதோ
அன்ஷிதா
கேரளாவில் இருந்து சினிமாவில் கலக்கி நடிகைகள் பலர் உள்ளார்கள், அதேபோல் சின்னத்திரையில் நிறைய இளம் நாயகிகள் களமிறங்கியுள்ளார்கள்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா என்ற தொடர் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமாக நாயகியாக வலம் வந்தவர் தான் அன்ஷிதா அக்பர்ஷா.
இந்த சீரியலுக்கு பிறகு குக் வித் கோமாளி 8வது சீசனில் கலந்துகொண்டனர் பிக்பாஸ் 8வது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டு விளையாடினார்.
பிக்பாஸ் வீட்டில் 84 நாட்கள் விளையாடியதற்காக இவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் என சம்பளம் பேசப்பட்டு ரூ. 21 லட்சம் நடிகை பெற்றதாக கூறப்படுகிறது.
புதிய வீடு
சீரியல்களை தாண்டி நடன நிகழ்ச்சிகளிலும் கலக்கிவரும் அன்ஷிதா இப்போது புதியதாக சொந்த வீட்டை வாங்கி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில், புதிய தொடக்கம், எனது கனவு இல்லம்.
என்னுடைய கனவு நிஜமாக மாறி உள்ளது, இது வெறும் வீடு அல்ல, கடவுளின் பரிசு. கடினமான காலத்தில் என்னுடன் நின்ற உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என பூஜை போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
