பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி பக்கம் வந்துள்ள அர்ச்சனா- ஷோவா, சீரியலா?
அர்ச்சனா
விஜய் டிவியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்துள்ளது.
கடைசியாக 7வது சீசன் ஜனவரி 2024ல் முடிவடைந்தது, இதில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் முதன்முறையாக பிக்பாஸ் வரலாற்றில் ஒரு விஷயம் நடந்தது.
அதாவது வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த நடிகை அர்ச்சனா 7வது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
அவர் வெற்றிப்பெற்றது ரசிகர்கள் அனைவருமே சரியாக முடிவாக தோன்றியது.
புதிய ஷோ
பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு சுற்றுலா செல்வது, தனியார் நிகழ்ச்சி, கல்லூரி நிகழ்ச்சி என பிஸியாக இருக்கும் அர்ச்சனா பிக்பாஸ் பிறகு விஜய் டிவி பக்கம் வந்துள்ளார். ஆனால் இந்த சீரியல் இல்லை, ஒரு புதிய ஷோவிற்காக வந்துள்ளார்.
மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கப்போகும் அது இது எது 3வது சீசன் நிகழ்ச்சி பிக்பாஸ் போட்டியாளர்களுடன் தொடங்கவுள்ளது.
படப்பிடிப்பின் போது அர்ச்சனா, கூல் சுரேஷ், மணிகண்டன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.