இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிக் பாஸ் பிரபலத்தின் தம்பி.. யாருனு தெரியுமா
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் வைத்யநாதன்.
இவர் தற்போது குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் மூலம் வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளாராம்.
இப்படம் குறித்து ராஜேஷ் வைத்யா கூறும்போது, " நான் படங்களில் நல்ல அறிமுகத்திற்காக காத்திருந்தேன். அருண் வைத்யநாதன் நெருங்கிய நண்பர் என்பதால், அவர் தனது படத்தின் கதையை கூறினார்.
கதை எனக்கு பிடித்திருந்தது. அப்போதுதான் அவர் என்னிடம் படத்திற்கு இசையமைப்பீர்களா, என்று கேட்டார். படத்தில் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் நல்ல சோக்ப் இருந்ததால், நானும் அவருடைய சலுகையை உடனடியாக ஏற்றுக்கொண்டேன் " என்றார்.
இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ள ராஜேஷ் வைத்யா, பிக் பாஸ் மூலம் பிரபலமான மோகன் வைத்தியாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri