பிக்பாஸ் புகழ் தனலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது... ஜோடியின் போட்டோ
பிக்பாஸ்
Bigg Boss 10: விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள் தான் முதலில் அனைவருக்கும் நியாபகம் வரும்.
நடனம், பாடல், கேம் ஷோ என தொடங்கி வெற்றிகரமாக இப்போது வரை ஏகப்பட்ட ஷோக்கள் ஒளிபரப்பாகிறது. தற்போது ரசிகர்களுக்கு 100 நாட்கள் தொடர்ந்து என்டர்டெயின்மென்ட் கொடுக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பைரவி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புத்தம்புதிய சீரியல்... நாயகன், நாயகி யார் தெரியுமா?
ஜுனியர் பிக்பாஸ்
இந்த 10வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட பலர் எலிமினேட் ஆகி சென்றுவிட்டனர். இந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் ஜுனியர் பிக்பாஸ் டாஸ்க் நடந்து வருகிறது.
அதாவது இந்த ஒரு வாரம் பிக்பாஸ் குரல் ஒலிக்கப்போவதில்லை, அதற்கு பதில் போட்டியாளர்களில் ஒருவர் பிக்பாஸாக தேர்வு செய்யப்பட்டு பேசுகிறார், அதில் முதல் ஆளாக வினோத் பங்குபெற்றார்.
இப்போது ஜுனியர் பிக்பாஸ் மாற்றப்பட்டு நிறைய சண்டைகளுடன் செல்கிறது.
தனலட்சுமி
பிக்பாஸ் 10வது சீசன் பரபரப்பின் உச்சமாக செல்ல ஒரு பழைய பிக்பாஸ் போட்டியாளரின் நிச்சயதார்த்தம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பிக்பாஸ் 6வது சீசனில் பங்குபெற்ற தனலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
வசந்த் என்பவருடன் தனலட்சுமிக்கு சிம்பிளான முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, அந்த புகைப்படங்களை தனலட்சுமி இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.