பிரபல நடிகருடன் போட்டோ எடுத்துள்ள பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனி- யாருடன் பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும். வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இதற்கு இருக்கும் TRP போல் இல்லை.
முதல் சீசனிற்கு தான் நிறைய எதிர்ப்புகள், பிரச்சனைகள் வந்தது, ஆனால் அடுத்தடுத்த சீசன் எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது. தற்போது பிக்பாஸ் 7வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கி ஓளிபரப்பாகிறது.
அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என 3 பேர் வெளியேறிவிட்டனர். இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார், என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜனனி போட்டோ
கடந்த பிக்பாஸ் 6வது சீசனில் இலங்கை பிரபலமாக கலந்துகொண்டவர் ஜனனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து நிறைய விதவிதமான போட்டோ ஷுட்களாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்.
அப்போது தான் அவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது படமும் வெளியாக ஜனனியின் சின்ன ரோலுக்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
ஜனனி தனது இன்ஸ்டாவில் நடிகர் விஜய்யுடன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்ய ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
