தனது 20வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் புகழ் ஜோவிகா... போட்டோஸ் இதோ
ஜோவிகா
பிக்பாஸ் தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள். பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் வனிதா விஜயகுமார் சினிமாவில் வலம் வந்தாலும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
அவரைப் போலவே அவரது மகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார், அவருக்கும் நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுத்தது.
பிக்பாஸ் பிறகு ஜோவிகா சமையல், துப்பாக்கிச் சுடுதல், வில் வித்தை என பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிறந்தநாள்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் வந்த பணத்தில் நடிகை வனிதா விஜயகுமார் மிஸ்டர் & மிஸஸ் என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதில் வனிதா விஜயகுமார் நாயகியாகவும், நடன இயக்குனர் ராபர்ட் நாயகனாகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஜோவிகா தனது 20வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். புதிய தசாப்தம், பதின் பருவம் முடிந்து, 20களில் நுழைவது ஒருவித அச்சத்தையும் வியப்பையும் தருகிறது.
நிறைய அன்புகளுடனும், ஆசிர்வாதங்களுடனும் நம்பிக்கையுடனும் கனவுகளுடனும் எனது வாழ்க்கையின் புதிய சகாப்தத்தில் நுழைகிறேன் என பதிவிட்டுள்ளார் ஜோவிகா.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
