புதிய விளம்பரத்தில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா- அவரே வெளியிட்ட வீடியோ
மகத் ராகவேந்திரா
தமிழ் சினிமாவில் கடந்த 2006ம் ஆண்டு வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகர் மகத் ராகவேந்திரா.
அதன்பின் காளை, மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மாநாடு, டபுள் எக்ஸ்எல் என தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார். ஆனால் அதில் கலந்துகொண்டவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் சில பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இவர் 2020ம் ஆண்டு பிராசி மிஷ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2021ம் ஆண்டு ஒரு மகனும் பிறந்தார்.
விளம்பரம்
குடும்பம், படங்கள் நடிப்பது என பிஸியாக இருந்த மகத் ராகவேந்திரா தற்போது புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். Harpic விளம்பரத்தில் தான் நடித்துள்ளார்.
அந்த விளம்பர வீடியோவை அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
