பிக்பாஸ் புகழ் நடிகை ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
பிக்பாஸ்
கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஜுலி.
அதில் அவரது போராட்ட திறனை கண்டு மக்கள் தமிழ்பெண், வீர தமிழச்சி என்றெல்லாம் புகழ்ந்து பேசினார்கள். அதில் கிடைத்த பிரபலம் விஜய் டிவியில் முதன்முறையாக ஒளிபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சி மூலம் கெட்டப்பெயர் தான் சம்பாதித்தார் என்றே கூறலாம். ஆனால் தன் மீது உள்ள மக்களின் அந்த பார்வையை அப்படியே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றினார்.
லேட்டஸ்ட்
நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், படங்கள் நடித்தார். ஆனால் அதிகம் போட்டோ ஷுட்கள் நடத்தி மக்கள் கவனத்தில் இருந்து வந்தார்.
சமீபத்தில் இன்ஸ்டாவில் வெள்ளை மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிக்பாஸ் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே என புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.