புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. என்ன கார் தெரியுமா?
பிக்பாஸ்
பிக்பாஸ், விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி.
முதல் சீசன் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் ஒவ்வொன்றிலும் நிறைய வித்தியாசமான விஷயங்களை வைத்து ஒளிபரப்பினார்கள்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நமீதா மாரிமுத்து. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக திருநங்கையாக மாடலும் நடிகையுமான நமீதா மாரிமுத்து களமிறங்கினார்.
புதிய கார்
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நீண்ட நாட்கள் விளையாடவில்லை, பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பின் நிறைய போட்டோ ஷுட்கள் செய்து செம பிஸியாக இருக்கும் நமீதா மாரிமுத்து தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
காரை வாங்கிக்கொண்டு வரும் வீடியோவை அவர் வெளியிட மக்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர் IBC Tamilnadu
