அட நம்ம பிக்பாஸ் புகழ் ஓவியா சூப்பர் வீடியோவுடன் வெளியிட்ட சந்தோஷ செய்தி... குவியும் வாழ்த்து

Yathrika
in திரைப்படம்Report this article
நடிகை ஓவியா
கடந்த 2010ம் ஆண்டு தமிழில் சூப்பர் ஹிட்டான களவாணி படத்தின் மூலம் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா.
முதல் பட வெற்றிக்கு பிறகு மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே என வரிசையாக படங்களில் நடித்து வந்தார்.
பட வாய்ப்புகள் குறைய விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றார்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவிற்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உருவாகியது.
வீடியோ
2019ம் ஆண்டுக்கு பிறகு தமிழில் ஒரு படம் கூட நடிக்காத ஓவியா மீண்டும் 2024ம் ஆண்டு பூமர் அங்கிள் படத்தில் நடித்தார், வெப் சீரியஸிலும் நடித்தார். ஆனால் எதுவும் சரியாக ஓடவில்லை.
இந்த நிலையில் புதிய படம் ஒன்றின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளார் ஓவியா. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இந்த படம் நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும் என மனதார பாராட்டி வருகிறார்கள்.

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
