பிக்பாஸ் புகழ் நடிகை ரித்திகா திருமண செய்யப்போகும் மாப்பிள்ளை இவர்தான்.. வெளிவந்த விவரம்
ரித்திகா
பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் பல கலைஞர்களுக்கு சினிமாவில் சாதிக்க முக்கிய படமாக அமைந்தது என்று கூறலாம்.
இந்த படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் ரித்திகா.
இப்படத்திற்கு பிறகு கபாலி, இருமுகன், ஒரு நாள் கூத்து, டார்ச் லைட், இரண்டாம் உலகப் போரில் கடைசி குண்டு, வால்டர், சில நேரங்களில் சில மனிதர்கள், கடவர், ஆதார் என பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான லெவன் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். படங்களை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு டைட்டிலையும் வென்றார்.
திருமணம்
பிஸியாக நடித்துவரும் இளம் நாயகியாக ரித்திகாவிற்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படங்களை ரித்திகா ஷேர் செய்ய வாழ்த்து குவிந்து வந்தது.
ஆனால் ரித்திகா மாப்பிள்ளையின் போட்டோவை Blur செய்து தான் பதிவு செய்திருந்தார். ரித்திகாவின் வருங்கால கணவர் யார் என்றால் அவரது நீண்டநாள் நண்பர் வினோத் லட்சுமணன் என்பவர் தானாம்.