தனது காதல் மனைவிக்காக புதிய கார் வாங்கிய பிக்பாஸ் புகழ் ஷாரிக்... வீடியோவுடன் இதோ
ஷாரிக் ஹாசன்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் ஜோடி உள்ளனர்.
இவர்களது மகனும் நடிகருமான ஷாரின் ஹாசன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து சில படங்களில் நடித்துள்ளார். படங்களில் சரியான ரீச் பெறாத இவர் பிக்பாஸில் கலந்துகொண்டார், ஆனால் அதில் அவர் கடைசிவரை வரவில்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன் இவருக்கு மரியா ஜெனிஃபர் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர் ஷாரிக்கை விட வயதில் மூத்தவர், ஏற்கெனவே திருமணமானவர், முதல் திருமணம் மூலம் ஜெனிஃபருக்கு ஒரு மகளும் உள்ளார்.

புதிய கார்
ஷாரிக்-மரியாவிற்கு ஒரு ஆண் குழந்தையும் கடந்த வருடம் பிறந்துள்ளது. இந்த நிலையில் ஷாரிக் தனது காதல் மனைவிக்காக ஒரு புதிய காரை பரிசாக வழங்கியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் ஷேர் செய்ய ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.