எதிர்ப்பாராமல் திடீரென கலைந்த கரு, சோகத்தின் உச்சம்- சுஜா வருணி, சிவகுமார் சொன்ன ஷாக்கிங் தகவல்
பிக்பாஸ் சுஜா
பிக்பாஸ் முதல் சீசனை யாராலும் மறக்கவே முடியாது. அந்நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் பெரிய ரீச் கிடைத்துள்ளது. அதில் ஒருவர் தான் நடிகை சுஜா, இவர் பிக்பாஸ் முதல் சீசன் வருவதற்கு முன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.
ஆனால் அவ்வளவாக ரீச் பெற்றது இல்லை, இந்நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது. இவர் சிவகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இப்போது ஒரு மகன் இருக்கிறார்.
சுஜா வருணி-சிவகுமார்
சுஜா வருணி மற்றும் அவரது கணவர் சிவகுமார் இருவரும் தங்களது வாழ்க்கை பயணத்தை குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் ஒரு சோகமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார்கள்.
அதாவது சுஜா வருணி சில நாட்களாக உடல் சோர்வாக இருப்பதும், மயக்கம் வருவதுமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். சரியாக சாப்பிடாதது என நினைத்து இருந்த அவர் ஒருகட்டத்தில் மிகவும் உடம்பு முடியாமல் மருத்துவமனை சென்றுள்ளனர்.
அப்போது மருத்துவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளீர்கள், இது ஆரம்ப கட்டம் தான் இன்னும் 20 நாட்கள் கழித்து வாருங்கள் என கூறி அனுப்பியுள்ளார். சிவகுமாரும் படு மகிழ்ச்சியாக பெண் குழந்தை வரப்போகிறது என இருந்துள்ளார்.
ஆனால் திடீரென சுஜா பிலீடிங் ஆனதை உணற மருத்துவமனை சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் நீங்கள் கவலைப்படாதீர்கள், கரு கலைந்துவிட்டது என கூறியிருக்கிறார்.
இந்த விஷயம் சுஜா மற்றும் சிவகுமாருக்கு பெரிய மன வலிமை கொடுத்துள்ளது என பேட்டியில் கூறியுள்ளனர்.
நடிகை நமீதாவா இது, குழந்தைகள் பெற்ற பிறகு இப்படி ஆகிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்