உடல் எடையை குறைக்க பிக்பாஸ் புகழ் சுஜா வருணி எடுத்துக்கொண்ட டயட்- இதோ டிப்ஸ்
சுஜா வருணி
வெள்ளித்திரையில் சிறுசிறு கதாபாத்திரங்களில் படங்கள் நடித்தும், சில பாடல்களுக்கு நடனம் ஆடியும் மக்கள் கவனத்திற்கு வந்தவர் தான் சுஜா வருணி. இவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றார்.
அதன்பிறகு தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தான் காதலித்தவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார், இன்ஸ்டாவில் எப்போதும் தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

டயட் பிளான்
சுஜா வருணி கொஞ்சம் உடல் எடை போட்டதால் மூட்டு வலி, இடுப்பு வலி, சோர்வு போன்ற உடல் பிரச்சனைகளை சந்திப்பதால் தீவிர வெயிட் லாஸ் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறாராம்.
இதற்காக தினமும் 1 மணி நேரம் தனது கணவருடன் இணைந்து பேட்மிட்டண் விளையாடுகிறாராம்.
அதிகமான நீர்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது, அரிசி, சப்பாத்தி, ஐங்க் ஃபுட்ஸ்களை நிறுத்திக் கொண்டாராம். இதுதவிர தினமும் வாக்கிங் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

விஜய் டிவியில் இருந்து வெளிவந்தது இதனால் தான்- முதன்முறையாக கூறிய டிடி