புதிய காரை வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை... எத்தனை லட்சம் தெரியுமா?
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல கலைஞர்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி இந்த பிக்பாஸ் மூலம் தனது வாழ்க்கையில் பெரிய வளர்ச்சியை கண்டவர் தான் தாமரை.
அந்த ஷோ முடிந்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் கொண்டாட்டம், Mr&Mrs சின்னத்திரை என தொடர்ந்து நிறைய ஷோக்கள் பங்குபெற்று வந்தவருக்கு சீரியல் வாய்ப்புகளும் அதிகம் வந்துள்ளது.
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடரில் நடித்து வருகிறார்.
புதிய கார்
சின்னத்திரையில் கலக்க தொடங்கியவர் புதிய வீடு கட்டியிருந்தார். தனது வீட்டை தான் தொடங்கிய யூடியூப் பக்கத்தில் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் தாமரை புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். Hyundai சிவப்பு நிற காரை வாங்கியுள்ளார், இதன் விலை ரூ. 7 லட்சத்திற்கும் மேல் என கூறப்படுகிறது.