பிக்பாஸ் புகழ் விசித்ராவிற்கு இன்று பிறந்தநாள்- ஸ்பெஷல் தினத்தில் அவர் வெளியிட்ட வீடியோ
நடிகை விசித்ரா
செந்தில்-கவுண்டமணி மிகவும் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா.
படங்களில் நடித்துவந்த இவர் திடீரென சினிமாவில் இருந்து மாயமானார், பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.
அந்த தொலைக்காட்சியை தொடர்ந்து அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார். மிகவும் திறமையாக விளையாடி 80 நாட்களை தாண்டி வீட்டிற்குள் இருந்தார்.
கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்தை மாற்றவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறியிருந்தார், அதை அவர் மாற்றிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

ஸ்பெஷல் வீடியோ
இன்று நடிகை விசித்ராவிற்கு பிறந்தநாள், அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். தனது வாழ்த்து பதிவு போட்ட அனைவரின் பதிவையும் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்து வருகிறார்.
அதோடு அவரது பிறந்தநாளுக்கு கிடைத்த ஸ்பெஷல் கேக் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதோ அவர் பிறந்தநாளில் வெளியிட்ட வீடியோ,
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri