செளந்தர்யாவின் குரலை கிண்டல் செய்த சீரியல் நடிகை.. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஏற்பட்ட பிரச்சனை
பிக் பாஸ்
பிக் பாஸ் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், நேற்று பிக் பாஸ் சீசன் 8 துவக்க நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த ஷோவுக்கு பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் என பலர் போட்டியாளராக கலந்து கொண்டனர்.
இந்த முறை ஆண்கள் vs பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டின் நடுவில் கோடு போடப்பட்டு தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
ஏற்பட்ட பிரச்சனை
ஷோ முடியும்வரை இது இப்படியே தான் இருக்கும் என பிக் பாஸ் அறிவித்துவிட்டார். இந்நிலையில், அதில் ஒரு போட்டியாளராக பங்குபெற்ற செளந்தர்யாவின் குரல் பிரச்சனையை கிண்டல் செய்யும் வகையில் சீரியல் நடிகை தர்ஷிகா பெண் குரலில் பேசுமாறு கேட்டுள்ளார்.
தற்போது, அவர் கூறிய இந்த வார்த்தைக்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செளந்தர்யா பிக் பாஸ் வீட்டுக்கு வந்த பிறகு விஜய் சேதுபதி அவருடைய குரலை தாண்டிய குணத்தை பாராட்டி பேசியிருந்தார்.
அதை தற்போது ரசிகர்கள் குறிப்பிட்டு தர்ஷிகாவுக்கு அறிவுரை சொல்லும் வகையில் விஜய் சேதுபதி செய்த விஷயத்தை ஹைலைட் செய்து வருகின்றனர்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
