பிக் பாஸ் 5 பைனல் ஞாயற்று கிழமை கிடையாதாம்.. வெளிவந்த ஷாக்கிங் செய்தி
இன்னும் இரு நாட்களில் நடைபெறவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனல் போட்டியை காண ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் இந்த ஐவரில் ஒருவர் தான், பிக் பாஸ் சீசன் 5வின் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்.
வரும் ஞாயற்று கிழமை மாலை 6 மணி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி பைனல் துவங்கும் என்று அறிவித்திருந்தனர்.
இது லைவ்வாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று தான் தற்போது வரை அனைவரும் நினைத்து வருகிறார்கள்.
ஆனால், லைவ் என்று எதிர்பார்த்த அணைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, பிக் பாஸ் பைனல் லைவ் கிடையாதாம். பைனல் போட்டியின் படப்பிடிப்பு நாளை சனிக்கிழமை நடக்கவுள்ளதாம்.
இதிலிருந்து எடுக்கப்படும் காட்சிகளை ஞாயற்று கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளனர்.