பிக் பாஸ் அல்டிமேட்-யை போலியான நிகழ்ச்சி என விமர்சித்த பிரபல நடிகை !
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோ ரசிகர்களிடையே பிரபலமாகி இருக்கிறது.
இந்த தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்களிடையே வாக்குவாதம் எழும்படியான டாஸ்க்களையே பிக் பாஸ் கொடுத்து வருகிறார்.
மேலும் தற்போது Celebrity Press Meet என்ற ஒரு டாஸ்க் நடந்து வருகிறது, இதிலும் போட்டியாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை ப்ரோமோக்களில் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாதா என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் "எனக்கு குடும்பம் இருக்கிறது. செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது. பணத்துக்காக போலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவசியம் இல்லை" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Well, I have a family and fulfilling work to attend to. No time for toxicity then or now. And certainly no time to run behind fake show TVs for payment. You need to take your twisted expectations elsewhere.#BiggBossUltimate https://t.co/IyJdKMCUNE
— Kasturi Shankar (@KasthuriShankar) January 31, 2022