பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 60 கேமராக்கள்- ஒரு கேமராவின் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
ரசிகர்கள் பல நாட்களாக ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 5வது சீசன் கடந்த அக்டோபர் 3ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீட்சயப்பட்ட முகம் சிலர் இருக்கிறார்கள், யார் என்றே தெரியாதவர்களும் உள்ளார்கள். ஆனால் இப்போது அவர்களும் மக்களுக்கு தெரிந்துவிட்டனர்.
அவ்வப்போது வீட்டில் சில சலசலப்புகள் எழுந்து வருகிறது, எப்போது பெரிதாக வெடிக்கும் என தெரியவில்லை.
இந்த நிலையில் தான் பிக்பாஸ் 5வது சீசன் வீட்டில் இருக்கும் கேமராக்களின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வீட்டில் 60 கேமராக்கள் உள்ளன, ஒரு கேமராவின் விலை அமெரிக்க மதிப்பில் சுமார் 8000 டாலர்.
இந்தியாவின் மதிப்பில் ரூ. 6 லட்சமாம். 60 கேமராவையும் சேர்த்து பிக்பாஸ் குழு ரூ. 3.6 கோடி செலவு செய்துள்ளனர். Sony BRC-H900 வகை கொண்ட இந்த கேமராவின் MB 2.7 தானாம்.
அதோடு இந்த கேமரா 5 கிலோ எடை கொண்டதாம்.