பிக் பாஸ் ஜனனியின் காஷ்மீர் போட்டோ! லியோ பட ஷூட்டிங்கில் இருக்கிறாரா?

By Parthiban.A Jul 10, 2023 12:00 PM GMT
Report

ஜனனி

பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த தொகுப்பாளராக அவர் பிக் பாஸ் மூலமாக தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்களை ஈர்த்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வர அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.   

பிக் பாஸ் ஜனனியின் காஷ்மீர் போட்டோ! லியோ பட ஷூட்டிங்கில் இருக்கிறாரா? | Bigg Boss Janany In Kashmir

லியோ படத்தில் நடிக்கிறாரா?

தற்போது ஜனனி காஷ்மீரில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவர் விஜய்யின் லியோ பட ஷூட்டிங்கில் இருக்கிறாரா என கேட்டு வருகின்றனர்.


ஏற்கனவே இது பற்றிய தகவல் பல மாதங்களுக்கு முன்பே வந்தாலும், ஜனனி தான் விஜய் உடன் நடிப்பதை உறுதியாக அறிவிக்கவில்லை.

தற்போது அவரே காஷ்மீர் புகைப்படங்கள் வெளியிட்டு இருப்பதால், லியோ படத்தில் நடிப்பது உறுதி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US