அட்டகாசமான BB Jodigal 2 புரொமோ- பாவனி, அமீர் என்னமா நடனம் ஆடுறாங்க, வீடியோ இதோ
விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இதுவரை 5 சீசன் ஒளிபரப்பாகிவிட்டது, அடுத்து 6வது சீசனை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அண்மையில் தான் முடிவடைந்தது, அதில் பாலாஜி முருகதாஸ் வெற்றியாளராக தேர்வானார்.
பிக்பாஸ் ஜோடிகள்
பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சி கடந்த வருடம் தான் தொடங்கப்பட்டது. முதல் சீசன் முடிவடைய இப்போது இரண்டாவது சீசன் கலக்கலான ஜோடிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது சீசனின் நடுவராக ரம்யா கிருஷ்ணன் வர இன்னொரு நடுவராக நடன இயக்குனர் சதீஷ் கலந்துகொள்கிறார்.
பிரியங்கா மற்றும் ராஜு போட்டியாளர்கள் என்று பார்த்தால் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
தற்போது பிபி ஜோடிகள் 2வது சீசனின் புரொமோ வந்துள்ளது, அதில் பாவனி மற்றும் அமீர் நடனத்தை பார்த்து நடுவர்கள் அப்படியே ஆடிபோய்விட்டார்கள்.
இதோ அந்த புரொமோ,