என்னையும் அப்படி தான் பண்ணீங்க.. பாரு, கம்ருதினுக்கு ஆதரவாக பேசி ட்ரோல்களிடம் சிக்கிகொண்ட ரவீனா
பிக் பாஸ் 9ம் சீசன் கடந்த வாரம் பெரிய அளவில் பரபரப்பாக சென்றது. அதற்கு காரணம் பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய இருவரும் கார் டாஸ்கில் சாண்ட்ராவிடம் நடந்து கொண்ட விதம் தான்.
சாண்ட்ராவை எட்டி உதைத்து கீழே தள்ளி, அவர் கால் சிக்கினாலும் பரவாயில்லை என கார் கதவை பார்வதி மூட முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை செய்த கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டனர்.

ஆதரவாக வந்த ரவீனா
இந்நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், சீரியல் நடிகையுமான ரவீனா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் "மனுஷன் என்றால் தப்பு பண்ணத்தான் செய்வான், பாரு மற்றும் கம்ருதீன் ஆகியோரை கடுமையாக பேசாதீங்க" என ரவீனா பேசி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் அவரை கமெண்டில் ட்ரோல் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
நான் பிக் பாசில் இருக்கும்போது என்னையும் அப்படி தான் பண்ணீங்க என ஒரு நபருக்கு பதில் கொடுத்து இருக்கிறார் ரவீனா.
மேலும் ட்ரோல்களுக்கும் ரவீனா பதில் அளித்து இருக்கிறார் பாருங்க. சொம்பு என அவரை விமர்சித்தவருக்கு, ‘நான் சொம்பாவே இருந்துக்குறேன்’ என அவர் பதிலளித்து உள்ளார்.
